TNPSC Thervupettagam

உலக அளவில் தாய் நாட்டிற்குப் பணம் அனுப்பும் செலவு  

April 27 , 2020 1677 days 693 0
  • உலக அளவில் தாய் நாட்டிற்குப் பணம் அனுப்பும் செலவு என்பது உலக வங்கிக் குழுவால் வழங்கப்படும் ஒரு வளம் சார்ந்த அறிக்கையாகும்.
  • இது பணம் அனுப்பும் 48 நாடுகள் மற்றும் பணத்தைப் பெறும் 105 நாடுகள் ஆகியவற்றின் செலவினம் குறித்த தரவைத் தருகின்றது.
  • தற்போதைய அறிக்கையின்படி, கோவிட் – 19 நோய்த் தொற்று மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, தாய் நாட்டிற்குப் அனுப்பப் படும் தொகையானது 2020 ஆம் ஆண்டில் (110 மில்லியன் அமெரிக்க டாலர்) 20% அளவிற்குக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில், தாய் நாட்டிற்குப் பணம் அனுப்புதல் ஆனது எப்பொழுதும் இல்லாத வகையில் 554 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவிற்குப் பணம் அனுப்புதல் ஆனது 23% என்ற அளவில், அதாவது 64 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டில் 83 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
  • தாய் நாட்டிற்குப் பணத்தை அனுப்பிப் பெறுதலில் உலகின் மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டில், இந்தியா வெளிநாடுகளில் பணியாற்றும் தன் மக்களிடமிருந்து 83.1 பில்லியன் அமெரிக்க டாலரை தாய் நாட்டிற்கு அனுப்பும் பணமாகப் பெற்றுள்ளது. இது மொத்த உலகளாவிய பணம் அனுப்புதலில் 12% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்